

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வெ. கோவிந்தராஜூலு வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவைத் தேர் தலில் திமுக அமோக வெற்றி பெற் றுள்ளதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், பல லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் இருக்கும் தமிழ கத்தை மீட்டெடுக்கவும், தேர்தல் அறிக்கையில் தெரிவித்த மக்கள் நலத் திட்டங்களை செயல் படுத்தவும் நிதி ஆதாரங்களை உருவாக்கும் பெரும் கடமை புதிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போதெல் லாம் வணிகர் நலன் காத்து, பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வந்துள்ளது. அந்த வகையில் தற்போது அமையவுள்ள திமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் தீர்க்கப்படாத வணிகர்களின் கோரிக்கைகளை தீர்க்கும் அரசாக இருக்கும் என வணிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். வணிகர் நலன் உட்பட தமிழக நலன் சார்ந்து தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.