14 திமுக எம்எல்ஏக்களில் 13 பேர் மீண்டும் வெற்றி : அதிமுகவில் 12 பேரில் 3 பேர் மட்டும் தேர்வு

14 திமுக எம்எல்ஏக்களில் 13 பேர் மீண்டும் வெற்றி :  அதிமுகவில் 12 பேரில் 3 பேர் மட்டும் தேர்வு
Updated on
1 min read

மத்திய மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் 2016-ம் ஆண்டு எம்எல்ஏவாக இருந்தவர்களில் இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட திமுகவில் 14 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதில் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவில் 12 பேரில் 3 பேர் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தவர்களில் அதிமுக சார்பில் 12 பேர் மீண்டும் போட்டியிட்டனர்.

இவர்களில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியிலும், உணவுத் துறை அமைச்சராக இருந்த ஆர். காமராஜ் நன்னிலம் தொகுதியிலும், கைத்தறித்துறை அமைச்சராக இருந்த ஓ.எஸ். மணியன் வேதாரண் யம் தொகுதியிலும் என 3 பேர் மட்டுமே இந்த தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்த 9 பேர் தோல்வியை தழுவினர். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த வெல்ல மண்டி என்.நடராஜன், கரூர் தொகுதியில் போட்டியிட்ட போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜய பாஸ்கர், அரியலூர் தொகுதியில் போட்டியிட்ட அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தோல்வியடைந்த வர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

திமுகவில்…

ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ வாக இருந்த ராமச்சந்திரனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in