

சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 1,322 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று 521 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
கரோனா பாதிக்கப்பட்ட வர்களில் நடப்பாண்டில் முதன்முறையாக, சேலம் மாநகராட்சியில் ஒரேநாளில் அதிகப்பட்சமாக 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட்டார அளவில் ஓமலூரில் 33 பேர், சங்ககிரி 17, ஆத்தூர் 12, அயோத்தியாப்பட்டணம் 13, நங்கவள்ளி 11, சேலம் வட்டாரம் 14, பனமரத்துப்பட்டி 15, வாழப்பாடி 14, எடப்பாடி 8, காடையாம்பட்டி 4, மகுடஞ்சாவடி 6, மேச்சேரி 4, தாரமங்கலம் 5, வீரபாண்டி 6, கெங்கவல்லி 9, மேட்டூர் நகராட்சி 8 பேர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டுள்ளனர்.
இதனிடையே, மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்த 594 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். 14 பேர் உயிரிழந்தனர். 3,422 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஈரோட்டில் 378
சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப் பட்ட அறிக்கையில் ஈரோட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கரோனா தொற்றால்உயிரிழந்துள்ளது தெரியவந் துள்ளது. கரோனா தொற்றால் இதுவரை 166 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் 423 பேர்
கிருஷ்ணகிரி மாவட் டத்தைச் சேர்ந்த 54 வயது ஆண். காய்ச்சல், சளி, மூச்சு திணறல் காரணமாக, கடந்த 18-ம் தேதி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. தொடர் சிகிச்சையில் இருந்தவர், கடந்த 28-ம் தேதி உயிரிழந்தார். இதன் மூலம் கரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129-ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 423 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
சிகிச்சையில் இருந்த 422 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 3 ஆயிரத்து 149 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்