திருச்சி மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள் :

திருச்சி மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள் :
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் தொழிலாளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் திராவிடமணி தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் க. சுரேஷ் மே தின கொடியை ஏற்றி வைத்தார். மாநில நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் எம்.செல்வராஜ் சிறப்புரை யாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் அன்பழகன், இப்ராகிம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோன்று தரைக்கடை வியாபாரிகள் (ஏஐடியுசி) தொழிற்சங்கத் தலைவர் அன்சர் தீன் தலைமையில் கொடியேற்றப்பட்டது. நிர்வாகக் குழு உறுப்பினர் அண்ணாதுரை சிறப்புரை யாற்றினார். மலைக்கோட்டை மக்கள் நற்பணி இயக்கத் தினருடன் இணைந்து சங்க அமைப்புச் செயலாளர் எஸ்.சிவா தலைமையில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மூலிகை சூப் வழங்கப் பட்டது.

திருச்சி திருவெறும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காந்தி நகர், செல்வபுரம், நவல்பட்டு சாலை உள்ளிட்ட இடங்களில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிர்வா கிகள் தஸ்தகீர், செந்தில்குமார், சந்தோஷ், தவுலத் பாண்டியன், பா.லெனின், மணிமாறன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உப்பிலியபுரம் ஒன்றியத் துக்குட்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 10 இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் டி.முத்துக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மங்கள்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in