நெல்லை, தென்காசியில் மே தின கொடியேற்று விழா :

பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்மே தினத்தை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்மே தினத்தை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, துரை, சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பில்மே தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சங்கத்தின் திருநெல்வேலி மாநகர் மாவட்ட தலைவர் சலீம், மாவட்டச் செயலாளர் செய்யது மைதீன், மாவட்ட துணைத் தலைவர் கல்வத்பாய், மாவட்ட பொருளாளர் சுல்தான் பாதுஷா, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் புகாரி சேட்,பாளை தொகுதி செயலாளர் சனா சிந்தா கலந்துகொண்டனர்.

தென்காசி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in