திருவண்ணாமலையில் - மினி லாரி ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கல் :

தி.மலையில் தொழிலாளர் தினத்தையொட்டி, மினி லாரி ஓட்டுநர்களுக்கு அமமுக மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் கதிரவன் சீருடைகளை வழங்கினார்.
தி.மலையில் தொழிலாளர் தினத்தையொட்டி, மினி லாரி ஓட்டுநர்களுக்கு அமமுக மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் கதிரவன் சீருடைகளை வழங்கினார்.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் தொழிலாளர் தினத்தையொட்டி மினி லாரி ஓட்டுநர்களுக்கு நேற்று சீருடை வழங்கப்பட்டது.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப் பட்டுள்ள ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது ஆண்டாக தொழிலாளர் தின விழா பேரணி மற்றும் கூட்டங்கள் நேற்று நடை பெறவில்லை. இதற்கு மாற்றாக, சங்க கொடி ஏற்றுதல் மற்றும் பெயர் பலகைக்கு மாலை அணிவித்தல், சீருடை வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட மினி லாரி ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் தொழிலாளர் தின விழா திருவண்ணாமலை பெரிய கடை தெருவில் நேற்று நடைபெற்றது.

கவுரவத் தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார். செயலாளர் முத்து வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அமமுக மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் கதிரவன் கொடி ஏற்றி வைத்து, 120 ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

இதில், மினி லாரி ஓட்டுநர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், சங்கப் பொருளாளர் ரஜினி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in