

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து சேலம் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவு கரோனா தொற்றுக்கு பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங் களில் பணிபுரியும் தொழிலாளிகள், தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பி வருகின்றனர்.
வெளிமாநிலங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு திரும்பும் தொழிலாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித் துள்ளது. இதனையடுத்து, சேலம்ஜங்ஷன் ரயில் நிலையம் வரும்பயணிகளுக்கு அங்கு அமைக்கப் பட்டுள்ள கரோனா பரிசோதனை மையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். அதேபோல, சேலம் காமலாபுரம் விமான நிலை யத்துக்கு வரும் பயணிகளுக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
பிற மாநிலம், மாவட்டங்களில் இருந்து சேலம் வருபவர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்து, அதன் முடிவு வெளிவந்ததும், தொற்றால் பாதிக்கப் பட்டவர்களை அதிகாரிகள் கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல, சேலம் ரயில்நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொண்ட பின்னர் ரயில்களில் செல்ல அனுமதித்து வருகின்றனர்.