வடலூரில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி :

வடலூர் உழவர்சந்தை எதிரில் குண்டும் குழியுமாக போக்குவரத்து செல்ல முடியாத நிலையில் உள்ள சாலை.
வடலூர் உழவர்சந்தை எதிரில் குண்டும் குழியுமாக போக்குவரத்து செல்ல முடியாத நிலையில் உள்ள சாலை.
Updated on
1 min read

வடலூரில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

வடலூரிலிருந்து பண்ருட்டிசெல்லும் சாலை போக்குவரத்துஅதிகமுள்ள சாலையாகும். வடலூரில் இருந்து பண்ருட்டி,நெய்வேலி, விழுப்புரம்,சென்னை, வேலூர், காஞ்சிபுரம்போன்ற முக்கிய நகரங்களுக்கும், சென்னையில் இருந்துகும்பகோணம், தஞ்சாவூர்போன்ற நகரங்களுக்கும் இந்தச் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இந்தச் சாலையில் நெய்வேலிமுதல் சேத்தியாதோப்பு வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்து செல்லமுடியாத அளவுக்கு உள்ளது.மேலும் வடலூர் நகரப் பகுதியில் உழவர் சந்தை எதிரேபெரிய பள்ளமும், குண்டும் குழியுமாக சாலை உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். கார், லாரி போன்ற கனரக வாகனங்களும் அடிக்கடி பழுதாகிவிடுகிறது. தற்போது விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரைசாலை அகலப்படுத்தும் பணிநடந்து வருகிறது. இதனால்வடலூர் நகரப்பகுதியில் உள்ள இந்தச் சாலையை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலனைகருத்தில் கொண்டு இந்தச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in