

கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக திருச்செங்கோடு உழவர் சந்தை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த திருச்செங்கோடு உழவர் சந்தை, திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று முதல் செயல்பட்டு வருகிறது.
உழவர் சந்தைக்கு வருவோர் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், என திருச்செங்கோடு நகராட்சி ஆணையர் ப.ஜெயராம ராஜா தெரிவித்துள்ளார்.