முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு... :

முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு... :
Updated on
1 min read

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை ஆட்சேர்ப்புப் பிரிவு சார்பில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதித்துறை ஆட்சேர்ப்புப் பிரிவு பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய விளம்பர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர்கள் https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 6-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தவர்கள் அதுகுறித்த தகவலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in