ஆதாருடன் இணைக்கப்பட்ட - பிற வங்கி கணக்கிலிருந்து தபால்காரர் மூலம் பணம் பெறலாம் :
ஆதாருடன் இணைக்கப்பட்ட பிற வங்கி கணக்கிலிருந்து பணம் பெறும் சேவையை எவ்வித கட்டணமுமின்றி தபால்காரர்கள் மூலம் பெறலாம் என தஞ்சாவூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரி வித்துள்ளது: கரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருவதால், தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும், விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல் போன்ற அஞ்சல் சேவைகளும், சேமிப்பு வங்கி சேவைகளும் வழங்கும் கவுண்டர்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும். மேலும், அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வழங்கி வரும் ஆதார் எண் இணைக்கப்பட்ட பிற வங்கி கணக்கிலிருந்து பணம் பெறும் சேவையை பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி தபால்காரர்கள் மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
