

ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் கரோனா தடுப்பூசி போட விரும்புபவர்களுக்கு, நாள்தோறும் மதியம் 3 மணி முதல் 5 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்து, மறுநாளே தடுப்பூசி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட, ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில், நேற்றுமுதல் மீண்டும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட வந்தவர்களில் 100 பேருக்குடோக்கன் வழங்கிய ஊழியர்கள், அவர்களை வரிசைப்படுத்தி, அனுப்புவதில் பல்வேறு குளறுபடிகளைச் செய்தனர். இதனால், தடுப்பூசி போட வந்தபொதுமக்களுக்கும், செவிலியர் களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரம் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
நாள்தோறும் எத்தனை மணிக்குடோக்கன் வழங்கப்படும், எவ்வளவுபேருக்கு வழங்கப்படும், டோக்கன்இல்லாமல் வரிசையில் காத்திருப்பவர் களுக்கு ஊசி போடப்படுமா என்பது குறித்து பணியாளர்கள் யாரும் முறையான விளக்கம் அளிக்கவில்லை. இதனால், காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, டோக்கன் பெற்றவர்கள் வரிசைப்படுத்தப் பட்டு அனுப்பப்பட்டனர்.
மேலும், ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு தேதி, நேரம்,மருத்துவமனை போன்றவை குறிப்பிடப் பட்டுள்ள நிலையில், மீண்டும் அவர்கள் டோக்கன் பெற வேண்டும் என வற்புறுத்தப் பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தடுப்பூசிக்கு டோக்கன் வழங்குவது குறித்த நடைமுறைகளை மாநகராட்சி நிர்வாகம் எளிமையாக்குவதோடு, இந்த பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் கேட்டபோது, ‘ஆரம்பத்தில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லாததால் கூட்டம் குறைவாக இருந்தது. தற்போது விழிப்புணர்வால் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இதில் இரண்டாம் டோஸ் போடு பவர்களும் சேர்வதால், கூட்டம் அதிகரித்துள்ளது. அவர்கள் இடையூறு இல்லாமல் தடுப்பூசி போட போதிய நடவடிக்கைகள் எடுக்கப் படும்’ என்றார்.
புதிய ஏற்பாடு
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில், 27-ம் தேதி வரை 1 லட்சத்து 25 ஆயிரத்து 832 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் ஒரு நாளில் 3239 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.