

மேச்சேரியில் நடந்த கால்நடை சந்தையில் நேற்று ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை யானது.
சேலம் மாவட்டம், மேச்சேரியில் வாரம்தோறும் புதன் கிழமை கால்நடை சந்தை கூடும். இங்கு விற்பனைக்கு வரும் மேச்சேரி இனசெம்மறி ஆடுகளுக்கு வியாபாரிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. நேற்றைய சந்தையில் பென்னாகரம், ஏரியூர், கொங்கணாபுரம், பள்ளிப்பட்டி, பொட்டனேரி பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வளர்ப்பு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்ல வந்திருந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்றைய சந்தையில்
ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையாகின என வியாபாரிகள் தெரிவித்தனர்.
சந்தையில் ஆயிரக்கணக் கானோர் திரண்ட நிலையில்,சமூகஇடைவெளி பின்பற்றா மலும், முகக் கவசம் அணியாமலும் பலர் பங்கேற்றனர். வரும் நாட்களில் நடைபெறும் சந்தையின்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் கண்காணித்து, மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.