நெல்லையில் குறையும் குழந்தைகள் பிறப்பு விகிதம் : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம்

நெல்லையில் குறையும் குழந்தைகள் பிறப்பு விகிதம்  :  தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் திருநெல்வேலியைச் சேர்ந்த அ. பிரம்மா தகவல்களை கேட்டிருந்தார். அதற்கு சுகா தாரத்துறை அளித்துள்ள பதில்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2018 மார்ச் முதல் 2019 மார்ச் வரையில் அரசு மருத்துவமனைகளில் 8,456 ஆண், 8,027 பெண் என்று மொத்தம் 16,483 குழந்தைகளும், தனியார் மருத்துவமனைகளில் 14,821 ஆண், 14,038 பெண் என்று மொத்தம் 28,859 குழந்தைகளும் பிறந்துள்ளன.

இதுபோல் 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையில் அரசு மருத்துவமனைகளில் 8,975 ஆண், 8,351 பெண் குழந்தைகள் என்று மொத்தம் 17,326 குழந்தைகளும், தனியார் மருத்துவமனைகளில் 11,992 ஆண், 12,746 பெண் குழந்தைகள் என்று மொத்தம் 24,738 குழந்தைகள் பிறந்துள்ளன.

2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் மாதம் வரையில் அரசு மருத்துவமனைகளில் 9,274 ஆண் குழந்தைகள், 8,691 பெண் குழந்தைகள் என்று, மொத்தம் 17,965 குழந்தைகளும், தனியார் மருத்துவமனைகளில் 11,430 ஆண் குழந்தைகள், 11,143 பெண் குழந்தைகள் என்று மொத்தம் 22,573 குழந்தைகள் பிறந்துள்ளன.

மொத்தமாக 2018-2019-ல் 45,342 குழந்தைகளும் (பிறப்பு சதவீதம் 13.95) , 2019-2020-ல் 42,064 குழந்தைகளும் (பிறப்பு சதவீதம் 12.94) , 2020-2021-ல் 40,538 குழந்தைகளும் (பிறப்பு சதவீதம் 12.5) பிறந்துள்ளன. பிறப்பு விகிதம் படிப்படியாக குறைந்துள்ளது.

மேலும் எடை குறைவான குழந்தைகளின் பிறப்பு விகிதமும் தற்போது அதிகரித்திருக்கிறது. 2018-2019-ல் 462, 2019-2020-ல் 505, 2020-2021-ல் 567 குழந்தைகள் எடை குறைவாக பிறந்திருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in