

`ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி அமைக்கப்படும் கண்காணிப்புக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்’ என, ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதன் மூலம் நாட்டின் அவசரத் தேவையில் சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி அமைக்கப்படும் கண்காணிப்புக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தேவையான பகுதிகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி வருகிறோம்.
பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் ஆதரவோடு ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை விரைவாக இயக்குவதை நோக்கியே எங்களது எல்லா முயற்சியும் அமைந்துள்ளது என கூறப்பட்டு உள்ளது.