

சேலம் மாவட்டத்தில் நேற்று 456 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வரை கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-க்கு மேல் இருந்தது.
இந்நிலையில், ஞாயிறுக் கிழமை முழு ஊரடங்குக்குப் பின்னர் நேற்று முன்தினம் 428 பேருக்கும், நேற்று 456 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500-க்கு கீழ் குறைந்துள்ளது.
நேற்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாநகராட்சிப் பகுதியில் 282 பேர், ஆத்தூரில் 30, ஓமலூரில் 18, சங்ககிரியில் 17, வீரபாண்டியில் 14, எடப்பாடி, மேட்டூரில் தலா 9, காடையாம்பட்டியில் 7, மேச்சேரி, தாரமங்கலம், நங்கவள்ளி, வாழப்பாடியில் தலா 6, தலைவாசல், அயோத்தியாப்பட்டணம் தலா 5 பேர் பாதிக்கப்பட்டனர்.