வெளிமாநில தொழிலாளருக்கு உதவ பிரத்யேக கட்டுப்பாட்டு அறை :

வெளிமாநில தொழிலாளருக்கு உதவ பிரத்யேக கட்டுப்பாட்டு அறை :
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளவெளி மாநிலங்களைச் சேர்ந்தஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கரோனா 2-வது அலை பரவல் காரணமாக, அரசுபுதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இச்சூழலில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்களுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலத் தொழிலாளர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக 044 27661950 என்ற தொலைபேசி எண், 9445911162 என்ற வாட்ஸ்-அப் எண் மூலம் தொடர்புகொண்டால், அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in