அருப்புக்கோட்டையில் - அரசு செவிலியரிடம் ரூ.5.43 லட்சம் நூதன மோசடி :

அருப்புக்கோட்டையில்  -  அரசு செவிலியரிடம் ரூ.5.43 லட்சம் நூதன மோசடி :
Updated on
1 min read

அருப்புக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரை ஏமாற்றி வங்கிக் கணக்கில் இருந்த ரூ.5.43 லட்சம் நூதன முறையில் திருடப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தேவாடெக்ஸ் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி ராஜேஸ்வரி(50). அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிகிறார். இவரது மொபைல் போனில் கடந்த 24-ம் பேசியவர், தான் ஸ்டேட் வங்கியில் இருந்து பேசுகிறேன். மோடி திட்டத்தில் பணம் போட வேண்டும் எனக் கூறி ராஜேஸ்வரியின் ஸ்டேட் வங்கி கணக்கு எண், இந்தியன் வங்கி கணக்கு எண், ஏடிஎம் விவரங்கள் ஆகியவற்றைக் கேட்டுள்ளார். அதற்கு ராஜேஸ்வரியும் பதில் அளித்துள்ளார்.

அதன் பிறகு ஸ்டேட் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.44 ஆயிரம், இந்தியன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4,99,705 என மொத்தம் ரூ.5,43,705 எடுக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த ராஜேஸ்வரி அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in