

தேனி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் பாண்டி தலைமையிலானஅந்த அமைப்பினர் மனு அளித்தனர். அந்த மனுவில், மொபைல் போன் செயலியில் அடிக்கடி வரும் விளம்பரங்களைக் கட்டாயமாகப் பார்க்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். அதைத் தவிர்க்கும் வசதி தற்போது வழங்கப்படவில்லை. இதில் பல விளம்பரங்கள் ஆபாசமாக உள்ளன. எனவே, இதை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.