சங்கரன்கோவில் மலர் சந்தை தனியார் பள்ளிக்கு இடமாற்றம் :

சங்கரன்கோவில் மலர் சந்தை தனியார் பள்ளிக்கு இடமாற்றம்  :
Updated on
1 min read

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் வளாகத்தில் செயல்பட்டு வந்த மலர் சந்தை கரோனா பரவல் காரணமாக தனியார் பள்ளி வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவிலைச் சுற்றியுள்ள ஏராளமான விவசாயிகள்தாங்கள் சாகுபடி செய்யும் பல்வேறு வகையான மலர்களை இச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவருகின்றனர். இங்கிருந்து தோவாளை, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளுக்கு மலர்கள் வாங்கிச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், சங்கரன்கோவில் பகுதியில் கரோனா வேகமாக பரவி வருவதால் மலர் சந்தைமூடப்பட்டது. கோயிலில் முடிகாணிக்கை செலுத்தும் மண்டபத்துக்கு பின்புறம் வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்தனர். திறந்தவெளியில் மலர் சந்தை இருப்பதற்கு நகராட்சி அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் மலர் சந்தை ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்துக்கு இடமாற்றம் செயயப்பட்டது.

கடந்த ஆண்டு கரோனா பரவல் அதிகரித்தபோதும் இங்குதான் மலர் சந்தை தற்காலிகமாக இயங்கி வந்தது.

சங்கரன்கோவிலைச் சுற்றியுள்ள ஏராளமான விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பல்வேறு வகையான மலர்களை இச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in