

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற வசந்த உற்சவத்தை காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியில் நின்றவாறு சுவாமி கும்பிட்டு விட்டு திரும்பிச் சென்றனர்.
தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க வழிபாட்டு தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி திருநெல்வேலியில் உள்ள நெல்லை யப்பர்- காந்திமதியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் கோயில்களில் பூஜைகள் தங்குதடையின்றி நடைபெறுகின்றன. நெல்லையப்பர் கோயிலில் நேற்று தொடங்கி 11 நாட்களுக்கு வசந்த உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்கு வந்த பக்தர்கள் வெளியில் நின்றவாறு சுவாமி கும்பிட்டு விட்டுச் சென்றனர்.