பாளை.யில் தனியார் பேருந்து கண்ணாடி உடைப்பு :

பாளை.யில் தனியார் பேருந்து கண்ணாடி உடைப்பு :
Updated on
1 min read

பாளையங்கோட்டை உத்திரபசுபதி நாயனார் தெருவை சேர்ந்தவர் செல்வகணேஷ் (31). இவரது உறவினர் ஒருவர்மரணமடைந்ததை அடுத்து இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில்செல்வகணேஷ் சென்று கொண்டிருந்தார். பாளையங்கோட்டை அரசு சித்தமருத்துவக் கல்லூரி அருகே சென்றபோது பின்னால்வந்த தனியார் பேருந்துஅவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்து பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று சிலர் பேருந்து மீது கற்களை வீசி தாக்கியதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் அங்கு வந்து பலத்த காயமடைந்த செல்வகணேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in