இந்தியாவுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்காக - ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ் ரூ.37 லட்சம் நன்கொடை :

இந்தியாவுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்காக -  ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ் ரூ.37 லட்சம் நன்கொடை :
Updated on
1 min read

ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளரும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான பாட் கம்மின்ஸ், தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியா நான் பல ஆண்டுகளாக மிகவும் நேசித்த ஒரு நாடு.இந்த நேரத்தில் இங்கு பலர் கரோனா வைரஸால் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிந்து மிகவும் வருத்தப்படுகிறேன்.

இந்த நேரத்தில் இந்தியாவின் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் பொருட்களை வாங்குவதற்காக நான் பி.எம். கேர்ஸ் நிதிக்குரூ.37 லட்சம் வழங்கி உள்ளேன். குறிப்பாக ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள மற்ற வீரர்களும், உலகில் உள்ள எவரும் இதேபோன்று தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க இது ஊக்கமாக அமையும். இது போன்ற நேரங்களில் உதவியற்றதாக உணர்வது எளிதானது. நான் நிச்சயமாக தாமதமாக உணர்ந்தேன். ஆனால் இந்த பொது வேண்டுகோளை விடுப்பதன் மூலம் நாம் அனைவரும் நம் உணர்ச்சிகளைச் செயல்படுத்த முடியும், அது மக்களின் வாழ்க்கையில் வெளிச் சத்தைக் கொடுக்கும்.

இவ்வாறு பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in