மறு உத்தரவு வரும் வரை மதுக்கூடங்களை மூட உத்தரவு :

மறு உத்தரவு வரும் வரை மதுக்கூடங்களை  மூட உத்தரவு :
Updated on
1 min read

இது தொடர்பாக காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சிர் ஜான்லூயில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று 2-வதுஅலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்துடாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் அருகில் அமைந்துள்ள அரசு மதுபானக் கூடங்கள், ஓட்டல்களில் உள்ள தனியார் மதுபானக் கூடங்கள், கிளப்புகளில் செயல்படும் பார்கள் என அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும். இதை மீறி மதுபானக் கூடங்கள் செயல்பட்டால் அதன் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in