

சிவகங்கை மாவட்டம், திருப்புனம் அருகே கொந்தகை யில் நடந்த அகழாய்வில் சில தினங்களுக்கு முன்பு முதுமக்கள்தாழி கண்டெடுக்கப்பட்டது. அதில் மனித எலும்புக்கூடு மற்றும் இரும்பு வாள் இருந்தன. இந்நிலையில், அதன் அருகிலேயே மேலும் ஒரு முதுமக்கள்தாழி கிடைத்தது. அதில் மனித மண்டை ஓடும், எலும்புகளும் இருந்தன. இதை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.