மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் - துணை நடிகர் உட்பட 3 பேர் ‘போக்சோ’வில் கைது :

மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் -  துணை நடிகர் உட்பட 3 பேர் ‘போக்சோ’வில் கைது :
Updated on
1 min read

நாமக்கல் அருகே மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் துணை நடிகர் உட்பட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கூலித்தொழிலாளியின் 16 வயது மகள் அரசுப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இச்சிறுமியை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, நாமக்கல் குழந்தை நல பாதுகாப்பு குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து அந்த குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவி 4 பேரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து நாமக்கல் எஸ்பி சக்தி கணேசன், விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்கஉத்தரவிட்டார். பாதிக்கப் பட்ட மாணவியின் புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீஸ்இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் ராசிபுரம் தாலுகா பட்டணம் பரமேஸ்வர் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தமிழ்ச்செல்வன் (20), மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து வெவ்வேறு நாட்களில் தண்ணீர்பந்தல் காட்டைச் சேர்ந்த சினிமா துணை நடிகரான மோகன்குமார் (27), காரைக் குறிச்சியைச் சேர்ந்தகவின்ராஜ் (19) மற்றும்கண்ணையன் (45) ஆகியோரும் மாணவியை பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்ச்செல்வன், மோகன்குமார் கவின்ராஜ் ஆகிய ‌3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.தலைமறைவான கண்ணை யனைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in