சித்ரா பவுர்ணமியையொட்டி, கிருஷ்ணகிரி பழைய பேட்டை அங்காளம்மன் கோயிலில் பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர்.
சித்ரா பவுர்ணமியையொட்டி, கிருஷ்ணகிரி பழைய பேட்டை அங்காளம்மன் கோயிலில் பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர்.

சித்ரா பவுர்ணமியையொட்டி - அங்காளம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை :

Published on

சித்ரா பவுர்ணமியையொட்டி, கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயிலில் விளக்கு பூஜை நடந்தது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. இதில், 1008 அம்மன் பெயரைச் சொல்லி பெண்கள் திருவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து தீபாராதனை செய்து வழிபட்டனர்.

உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா தொற்று விரைவில் நீங்கி மக்கள் சுபிட்சமாக வாழவும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து மீண்டு வரவும் சிறப்பு மந்திரங்கள் முழங்கப்பட்டன. சித்ரா பவுர்ணமியையொட்டி அங்காளம்மன், அனைவருக்கும் எழுத்தறிவை கற்பிக்கும் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in