

கரோனா பாதிப்பில் உயிரிழந்த வருவாய் ஆய்வாளரின் உருவப்படத்துக்கு விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் அகஸ்டின் பெர்னாண்டோ கரோனாவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு, வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டாட்சியர் பா.ரகுபதி, சங்க வட்டத் தலைவர் ச.பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர் சரவணபெருமாள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.