

திருச்சி பெல் நிறுவனத்திலுள்ள 3 ஆக்சிஜன் தயாரிப்பு பிளான்ட்டு களில் சீரமைப்பு பணிகளைச் செய்து, அவற்றில் உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கனரக தொழிற் சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு, திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா நேற்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
திருச்சியிலுள்ள பாரத மிகுமின் நிலையத்தின் (பெல்) எம்.எச்.டி மையத்தில் ஒரு மணி நேரத்துக்கு தலா 140 மெட்ரிக் க்யூப் அள வுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய் யக்கூடிய 3 பிளான்ட்டுகள் கடந்த 2004 முதல் செயல்படாமல் உள் ளன. இங்குள்ள கம்ப்ரசர்களை மாற்றியமைத்து, காற்றைப் பிரித்தெடுக்கும் செப்புக் கலங் களை சீரமைத்து, ப்ரீயான் யூனிட்டில் பழுது நீக்கி, குளிர்நீர் உந்து குழாயை புதுப்பித்து, ஆக்சிஜனை சேமித்து வைப்ப தற்கான கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி, அனைத்து வால்வு களிலும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால் அடுத்த 15 முதல் 20 நாட்களுக்குள் மீண்டும் இங்கு ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க முடியும் என தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, மிக விரைவில் இப் பணிகளை மேற்கொண்டு, இங்கு ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்கினால், கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆக்சிஜனை விநியோகித்து அவர்களின் உயி ரைக் காப்பாற்ற முடியும். இந்த விவகாரத்தில் உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.