

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள் நேற்று மூடப்பட்டன.
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏப்.20 முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, திரையரங்கு, உடற் பயிற்சிக் கூடம், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், பெரிய கடை கள், வணிக வளாகங்கள், சலூன் கடைகள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதி கிடையாது என்று அறிவித்தது.
அரசின் அறிவிப்பின்படி ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக் காவல் அகி லாண்டேஸ்வரி ஜம்பு ேசுவரர் கோயில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில், மெயின் கார்டுகேட் லூர்து அன்னை ஆலயம், நத்தர்ஷா பள்ளிவாசல் உட்பட திருச்சி மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மூடப் பட்டன. இருப்பினும், வழிபாடு நடத்த கோயிலுக்கு வந்தவர்கள், வாசலிலேயே நின்று வழிபட்டுச் சென்றனர். ரங்கம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத தால், கோயில் நிர்வாகம் சார்பில் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
அதேவேளையில், பெரிய ஜவுளிக் கடைகள் காலையில் மூடப்பட்டிருந்த நிலையில், பிற்பகலுக்கு பிறகு திறக்கப்பட்டு செயல்பட்டன.