

புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரியிடம் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவக்குமார் நேற்று மனு அளித்தார். அதில், நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பணப் பட்டுவாடா அதிக அளவில் நடந்துள்ளது. தேர்தலும் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை. எனவே, இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.