ரூ.2,000 கள்ளநோட்டு: இளைஞர் கைது :

ரூ.2,000 கள்ளநோட்டு: இளைஞர் கைது :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் டிஎஸ்பி இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி நகரம் முழுவதும் வாகன சோதனை மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், அசேஷம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த இளைஞரின் அறையை சோதனை மேற்கொண்ட போலீஸார், அங்கிருந்து ரூ1.90 லட்சம் மதிப்புள்ள ரூ.2,000 கள்ள நோட்டுகள் 95 மற்றும் 50 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அந்த இளைஞர் திருமக்கோட்டை மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன்(33) என்பது தெரியவந்தது. மேலும் தமிழகத்தின் பல நகரங்களில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுகின்ற கும்பலுடன் தொடர்பு இருப்பதும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் கள்ளநோட்டு மாற்றிய வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மன்னார்குடி போலீஸார் மாதவனை நேற்று மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in