கோவில்பட்டி -சாத்தூர் சாலையில் தனியார் கல்லூரி எதிர்புறம் சாலையோரம் மர்மநபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்துள்ளனர்.
Regional02
குப்பைகளை சாலையோரம் கொட்டி தீ வைப்பு : புகையால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
கோவில்பட்டியில் சாலையோரம் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையில் தனியார் கலைக்கல்லூரி எதிர்புறம் சாலையோரத்தில், இரவு வேளையில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டி, அங்கேயே தீ வைத்துச் செல்கின்றனர். அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது.
இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்கின்றனர். கல்லூரி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
