

வேலூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுபவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், காய்ச்சல், சளி, தும்மல், இருமல், மூச்சுப் பிரச்சினை இருப்பவர்கள், இருதய கோளாறு, சர்க்கரை நோய், நுரையீரல் நோய் பாதிப்பு இருப்பவர்களை வேலை செய்யும் இடத்தில் அனுமதிக்கக்கூடாது.
2 மீட்டர் இடைவெளி
வேலை செய்யும் இடத்தில் சோப்பு பயன்படுத்தி கைககளை கழுவுவதை உறுதி செய்ய போதுமான தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
எச்சில் துப்ப தடை..
உணவு வகைகளையும் குடிநீரையும் பகிர்ந்துகொள்ள தடை செய்வதுடன் பணியாளர் யாராவது ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானால் உடனடியாக அந்த தொகுப்பில் பணியை நிறுத்த வேண்டும். நூறுநாள் வேலை உறுதித் திட்டத்தில் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.