கிரெடாய் கூட்டமைப்பின் தமிழக பிரிவு : தலைவராக சுரேஷ் கிருஷ்ண் பதவியேற்பு :

சுரேஷ் கிருஷ்ண்
சுரேஷ் கிருஷ்ண்
Updated on
1 min read

இந்தியா ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் (‘கிரெடாய்’) தமிழக பிரிவு தலைவராக சுரேஷ் கிருஷ்ண் பதவியேற்றார்.

இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிரெடாய் தேசிய அமைப்பில் 21 மாநில, 217 நகர பிரிவுகளைச் சேர்ந்த 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். கிரெடாய் தமிழக பிரிவில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு ஆகிய நகர பிரிவுகளைச் சேர்ந்த 294 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், கிரெடாய் தமிழக பிரிவின் 6-வது தலைவராக சுரேஷ் கிருஷ்ண் பொறுப்பேற்றுக் கொண்டார். மெய்நிகர் தளத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கிரெடாய் தேசிய தலைவர் ஹர்ஷ்வர்தன் படோடியா தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். அடுத்த தலைவரான போமன் ஆர்.இரானி, துணைத் தலைவர் ஜி.ராம் ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சுரேஷ் கிருஷ்ண் பேசும்போது, ஹெச்டிஎஃப்சி தலைவர் தீபக் பரேக் கூறியதை நினைவுகூர்ந்தார். ‘‘கட்டுமானத் தொழிலுக்கு இங்கு அதிக தேவை உள்ளது. கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும். கட்டுமானம், ரியல் எஸ்டேட் நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, இத்துறை மேலும் வளர்ச்சி அடைய, அரசுக்கும் இத்துறைக்கும் இடையே சிறந்த நல்லுறவை ஏற்படுத்துவதே சங்கத்தின் குறிக்கோள்” என்று சுரேஷ் கிருஷ்ண் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in