

உடுமலை:திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குறிச்சிக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 24-ம் தேதி 'அடர் வனம்' உருவாக்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளிச் செயலர் சந்தோஷ் தலைமை வகித்தார். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மருத்துவர் சுந்தர்ராஜன், சக்ரபாணி, சத்யம் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகள் உதவியுடன் பள்ளி வளாகத்தில் பழ வகை மரங்கள், நிழல் தரும் மரங்கள் என 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் ஜெனார்த்தனன், தேஜஸ் ரோட்டரி சங்கத் தலைவர் மணிகண்டன் மற்றும் அதன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.