

கோடை மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,589 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு கடந்த 19-ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 216 கனஅடியாக இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.
கடந்த 20-ம் தேதி முதல் நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடிக்கு குறையாமல் இருந்தது. நேற்று முன்தினம் விநாடிக்கு 1,439 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்த நிலையில், நேற்று 1,589 கனஅடியாக மேலும் அதிகரித்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 97.57 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 97.60 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 61.77 டிஎம்சி உள்ளது.