

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில்ஒரேநாளில் அதிகபட்சமாக நேற்று 511 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 8-ம் தேதிக்கு முன்னர் வரை 100-க்கும் குறைவாக இருந்து வந்தது. பின்னர் தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று முன்தினம் 490 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடப்பாண்டில் ஒரேநாளில் அதிகபட்ச பாதிப்பாக 511 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 262 பேர், ஓமலூர் வட்டாரத்தில் 49 பேர், ஆத்தூரில் 20 பேர், சங்ககிரியில் 17 பேர், நங்கவள்ளியில் 15 பேர், மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டியில் தலா 14 பேர், வீரபாண்டியில் 13 பேர், அயோத்தியாப்பட்டணம், தாரமங்கலத்தில் தலா 12 பேர், தலைவாசலில் 10 பேர் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 3,401 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே, நேற்று 288 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.