கடலூர் அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு :

கடலூர் அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு :
Updated on
1 min read

கடலூர் அருகே உள்ள மணக்குப் பம் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணராமன். விவசாயி.இவரது மனைவி தெய்வானை. இவர்க ளது மகள் திலகவதி (19). இவர் கடலூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்பி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர்க ளுக்கு 2 வீடு உள்ளது. மாடி வீடு ஒன்றும், அதன் எதிர்புறம் ஓட்டு வீடு ஒன்றும் உள்ளது. திலவதி எப்போது இரவில் ஓட்டு வீட்டில் படித்து விட்டு தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திலகவதி ஓட்டு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். நேற்று காலை தெய்வானை, திலகவதியை எழுப்புவதற்காக ஓட்டு வீட்டுக்கு சென்று கதவை திறந்துள்ளார். அப்போது திலக வதி எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த அவர் மயங்கி விழுந்தார்.இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற கடலூர் டிஎஸ்பி சாந்தி தலைமையிலான போலீஸார் திலவகவதி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in