குமாரபாளையம் ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் :

குமாரபாளையம் ஓம் காளியம்மன் கோயிலில் நேற்று வேத மந்திரங்கள் முழங்க கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
குமாரபாளையம் ஓம் காளியம்மன் கோயிலில் நேற்று வேத மந்திரங்கள் முழங்க கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
Updated on
1 min read

குமாரபாளையத்தில் உள்ள ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனை அருகே பிரசித்தி பெற்ற ஓம் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த 23-ம் தேதி கணபதி பூஜை, 24-ம் தேதி காவிரி தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை கோயில் கோபுரக்கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் குமாரபாளையத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று முழு ஊரடங்கு என்பதால் கட்டுப்பாடுகளுடன் விழா நடத்தப்பட்டது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in