

ஒகேனக்கலில் நேற்று முன்தினம் இரவு 17 மிமீ மழை பதிவானது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல் பகுதியில் அதிகபட்சமாக 17 மிமீ மழை பதிவானது. பென்னாகரத்தில் 4 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் அன்றைய தினம் லேசான தூறல் மட்டுமே இருந்தது.
மாவட்டத்தில் சில பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெயில் உஷ்ணம் சற்று தணிந்தது. இதனால், கோடை வெயில் உக்கிரத்தில் சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.
நீர்வரத்து சரிவு