கரோனா அறிகுறியுடன் இருப்பவர்கள் சிகிச்சைக்கு தாமதிப்பது ஆபத்தானது : அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்

கரோனா அறிகுறியுடன் இருப்பவர்கள் சிகிச்சைக்கு தாமதிப்பது ஆபத்தானது :  அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

கரோனா அறிகுறியுடன் இருப்பவர்கள் சிகிச்சைக்கு செல்லாமல் தாமதிப்பது, தள்ளிப் போடுவது ஆபத்தானது என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்து வக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கரோனா சிகிச்சை மையத்துக்கு நேற்று வந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அங்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதி, மருத்து வக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட மருத்துவ அலுவலர்கள், பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, சிகிச்சை பெற்று வருவோரின் விவரம், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். தொடர்ந்து, நோயாளிகளுக்கு வழங்கப் படும் உணவுகளை கொண்டுவரச் செய்து, அதை சாப்பிட்டுப் பார்த்து தரத்தை பரிசோதித்த அமைச்சர், இன்னும் தரமாக உணவு வழங்குமாறு அறிவுறுத்தினார்.

பின்னர், அவர் செய்தி யாளர்களிடம் கூறியது: முழு ஊரடங்கிலும் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களை ஊக்குவிக்கவே இங்கு வந்தேன். அண்டை மாநிலங் களில் 5 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழக மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண் டும். உருமாறியுள்ள கரோனா வைரஸால் 30 முதல் 45 வயதுடையோரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கரோனா பாதிப்பு அறிகுறியுடன் இருப்பவர்கள் சிகிச்சைக்கு செல்லாமல் தாமதிப்பதும், தள் ளிப்போடுவதும் ஆபத்தானது.

அத்தகைய சூழலில் நோய் தொற்றின் வீரியம் அதிகரித்துவிடுவதால், நுரையீரல் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் செலுத்தவேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, அறிகுறி இருப்பது தெரியவந்த உடனேயே மக்கள் நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றுவிட வேண்டும். இதுவரை 9.5 லட்சம் பேரை தமிழக சுகாதாரத்துறை காப்பாற்றி உள்ளது. களத்தில் போராடி வரும் சுகாதா ரத்துறையினருக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in