கரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு - கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் : தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொடர்பான சந்தேகங் களுக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. அந்த அறையில் 04175 – 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி இணைப்பு உள்ளது. மேலும் 04175 – 233344 மற்றும் 233345 என்ற தொலைபேசி எண்களும் பயன்பாட்டில் உள்ளன.
அதேபோல் 8870700800 என்ற வாட்ஸ்-அப் எண்ணும் உள்ளது. இந்த எண்களை தொடர்பு கொண்டு, கரோனா தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
