உளுந்தூர்பேட்டை இளம்பெண் கொலையில் - பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் : வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை வலியுறுத்தல்

விழுப்புரத்தில் சமூக நீதி பேரவை சார்பில் உண்மை அறியும் குழுவினர் அறிக்கை வெளியிட்டனர்.
விழுப்புரத்தில் சமூக நீதி பேரவை சார்பில் உண்மை அறியும் குழுவினர் அறிக்கை வெளியிட்டனர்.
Updated on
1 min read

தேவியானந்தலில் கொலையான இளம்பெண் குடும்பத்திற்கு தமிழகஅரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை வலியுறுத் தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை அருகேதேவியானந்தல் கிராமத்தில் சரஸ்வதி என்ற இளம்பெண் அண் மையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவையின் உண்மை அறியும் குழுவின் அறிக்கையை இக்குழுவின் தலைவர் வழக்க றிஞர் பாலு விழுப்புரத்தில் வெளி யிட்டார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

சரஸ்வதி மரணத்தை, போலீ ஸார் ஆரம்பத்தில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் விசாரணை செய்துகொலை வழக்காக மாற்றம் செய்து, சம்மந்தப்பட்ட 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் காவல்துறை சிறப்பாக செயல் பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனையின் பேரில்,இச்சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க. 12 பேர் அடங்கிய வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்து முழுமையான ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட சரஸ் வதியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். அவரின் தங்கை, தம்பிபடிப்பு செலவுகளை அரசே ஏற்கவேண்டும். குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவும், கடுமையானதண்டனை கிடைக் கவும் சிறப்பு வழக்கறிஞரை நியமித்து வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், அதற்கு துணைபுரிபவர்கள், தூண்டுதலாக இருப்பவர்களை தண்டிக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண் டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங் களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வகையில், சிறப்பு சட்டங்களும், மாவட்டந்தோறும் ஆலோசனை மையங்களையும் அரசு ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் திறன் வகுப்பு, பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என அவர் கூறினார்.

பாமக மாநில துணைப்பொதுச் செயலாளர் தங்கஜோதி, மாவட்ட செயலாளர் புகழேந்தி, திண்டிவனம் வழக்கறிஞர் பாலாஜி, வழக்கறிஞர் கலியமூர்த்தி, பழனிவேல், செந்தில் குமார், சிவராமன், ராமர், முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in