கடலூரில் முகக்கவசமின்றி மீன் வாங்க குவிந்த மக்கள் :

கடலூர் முதுநகர் அருகே காரைகாட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்.
கடலூர் முதுநகர் அருகே காரைகாட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்.
Updated on
1 min read

கடலூரில் கரோனா பயமின்றி முகக்கவசம் அணியாமல் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலம் தொடங்கியுள்ளதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்தநிலையில் நேற்று கடலூர் முதுநகர் அருகே உள்ள காரைக்காடு பகுதிக்கு கேரள மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் மீன் கள் கொண்டு வரப்பட்டன. வாகனங்களில் வைத்தபடியும், வெளி யில் வைத்தபடியும் மீன்களை விற்றனர்.

மீன் விற்பனையை அறிந்த பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் மீன்களை வாங்கி சென்றனர். கடலூர் துறைமுகம் பகுதியிலும் மீன்விற்பனை நடைபெற்றது. இன்று (ஏப்.25) முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் நேற்றே போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in