குறிஞ்சிப்பாடி அருகே - காதலித்து திருமணம் செய்த தங்கை சாவில் சந்தேகம் : அண்ணன் போலீஸில் புகார்

குறிஞ்சிப்பாடி அருகே -  காதலித்து திருமணம் செய்த தங்கை சாவில் சந்தேகம் :  அண்ணன் போலீஸில் புகார்
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடியில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அண்ணன் போலீஸில் புகார் செய்துள்ளார்.

குறிஞ்சிப்பாடி அடுத்த மேலபுதுபேட்டை கிராமத்தில் வசிப்பவர் ராஜதுரை (29). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரும் வடலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த வைஜெயந்திமாலா(29) என்பவரும் காதலித்தனர்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன், மனைவிஇடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. வைஜெயந் திமாலா நேற்று முன்தினம் மேலபுதுபேட்டை கிராமத்தில் உள்ள கணவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் அண்ணன் வாஞ்சிநாதனுக்கு தகவல் வந் துள்ளது.

இதுகுறித்து நேற்று வாஞ்சிநாதன் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் கொடுத் துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:

எனது தங்கை வைஜெயந்தி மாலா கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ராஜதுரை என்பவரை காதலித்து ஏங்களது சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக வரதட் சனை கேட்டும், குழந்தை இல்லைஎனவும் கூறி கணவன் மனை விக்குள் பிரச்சினை இருந்து வந்தது.

இந்நிலையில் எனது தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின் றனர். அவர் சாவில் சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

குறிஞ்சிப்பாடி போலீஸார் மர்ம மரணம் சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி பத்து மாதங்களே ஆகியுள்ளதால் கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீசன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in