

எடப்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து வருவதாக எடப்பாடி காவல் நிலையத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து, எஸ்ஐ பெரியதம்பி தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மேட்டு தெருவைச் சேர்ந்த மாயவன், செல்வராஜ், அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார், வெள்ளாண்டி வலசு முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.