

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத தற்காக, தூத்துக்குடி நகர காவல் உட்கோட்டத்தில் 214 பேர்,தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 61, திருச்செந்தூர் 59,வைகுண்டம் 40, மணியாச்சி 92, கோவில்பட்டி 151, விளாத்திகுளம் 66 மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 39 என மொத்தம் 722 பேரிடமிருந்து ரூ.1.44 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 8 பேருக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.