பசுமை பாதையில் மரங்கள் வெட்டிச் சாய்ப்பு : மின் ஊழியர்களுக்கு தன்னார்வலர்கள் கண்டனம்

பசுமை பாதையில் மரங்கள் வெட்டிச் சாய்ப்பு :  மின் ஊழியர்களுக்கு தன்னார்வலர்கள் கண்டனம்
Updated on
1 min read

திருச்சி அண்ணா விளையாட்டரங் கத்தைச் சுற்றியுள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் நடைபயிற்சி செல்பவர்களுக்காக தமிழக அரசின் புதுமை முயற்சிகள் திட்டத்தின்கீழ் ரூ.1.60 கோடி செலவில் பேவர் பிளாக் மூலம் நடைபாதை உருவாக்கப்பட்டது. அதன்பின், மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலையுடன் தன்னார்வலர்கள் இணைந்து சாலையோரங்களிலும், பேவர் பிளாக் நடைபாதையின் மையப் பகுதிகளிலும் நாட்டு வகை மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வந் தனர். தற்போது அவை நன்கு வளர்ந்துள்ளன.

இதற்கிடையே, மின்கம்பிகளில் உரசி விடக் கூடாது என்பதற்காக இச்சாலையையொட்டி இருந்த சில மரங்களை மின் ஊழியர்கள் முழுவதுமாக வெட்டிச் சாய்த்துள்ளனர். இது தன்னார்வலர்களுக்கும், நெடுஞ் சாலைத்துறையினருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஆலோசகரான கே.சி.நீலமேகம் கூறும்போது, ‘‘நன்கு வளர்ந்துள்ள மரங்களை வெட்டிய மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in