நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேகம் :

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்ப காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. 										    படங்கள்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்ப காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. படங்கள்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி காந்திமதியம்மன் உடனுறை நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடை பெற்றது.

இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து கும்ப பூஜைகளும் நடைபெற்றன. காலை 10.40 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும்பரிவார மூர்த்தி விமானங்களுக்கு சிறப்பு கும்ப அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்நிதிகளில் தீபாராதனை நடத்தப்பட்டது. இரவில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் கோயில் உள்பிரகாரங்களில் உலா நடைபெற்றது.

கரோனா கட்டுப்பாடுகளால் விமான பூஜையின்போது கோயிலின் மேல்பகுதியில்பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்கு வந்தபக்தர்களுக்கு உடல்வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மீனாட்சி திருக்கல்யாணம்

இதையொட்டி அதிகாலை யில் கோயில் நடைதிறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்புஅபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சொக்கநாதர், மீனாட்சி அம்பாள் உற்சவருக்கு திருக்கல்யாண அலங்காரம் செய்யப்பட்டு கோயில் மகா மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து சிறப்பு ஹோமம், சுவாமி- அம்பாள் மாலை மாற்றுதல், திருமாங்கல்யம் அணிவிப்பு உள்ளிட்ட திருக்கல்யாண வைபவங்கள் நடைபெற்றன. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in